![]() |
|||
|
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை
நாகலிங்கம் அவர்கள் 18-07-2011 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வனும், பாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும், அப்பாச்சாமி, சிவக்கொழுந்து, சுப்பிரமணியம், மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சத்தியலிங்கம்(லண்டன்), சத்தியநேசன்(இலங்கை), சத்தியவரதன்(லண்டன்), சத்தியபாமா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மதிவதனி(லண்டன்), ராசலலிதா(பத்தமேனி), கிருபாமதி(லண்டன்), அன்புச்செல்வன்(இலங்கை), கிருஷ்ணகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமானரும், சுரேன்(லண்டன்), தயான்(லண்டன்), காயதர்சன், நிதர்ஷன், மதுசன், மதுசா, சர்மிளா, றம்மியா(லண்டன்), பிரபானந்தி(கனடா), தர்மிளா(லண்டன்), சத்தியக்கலா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும், அபினன்(கனடா), அபிஷா(கனடா), அபிசன்(கனடா), அபினா(லண்டன்), அதுசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-07-2011 புதன்கிழமை அன்று முற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பத்தாலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
: தொடர்புகளுக்கு
|
|||