கண்ணீர் அஞ்சலி                     

அமரர் செல்வத்துரை இராசரத்தினம்
மண்ணில் : 7 சனவரி 1956 — விண்ணில் : 21 சனவரி 2012

ஈழத் திருநாட்டின் வளம்மிகு சுழிபுரத்தே
           வந்துதித்த தனயனவன் மறைந்தானோ
செல்லத்துரை பொன்னம்மா உறவின் பயனாக
           அருமருந்தாய் உதித்தவன் மறைந்தானோ
வந்தநல் இரத்தினமென வைத்தியர்கள் அன்று
           மகிழ்ந்திருக்க இன்று மன்னவன் மறைந்தானோ
தைத்திங்களில் வந்துதித்த தவப்புதல்வன் இரத்தினமே
           இராசரத்தினமே உலகை மறந்தனையோ.

இரட்ணம் நாலு நல்ல சகோதரருடன்
           அம்பிகை இருவருடன் வந்தவன் போனானோ
சின்னப்பா தங்கம்மா மகளுக்கு வாழ்வுதந்து
            மருமகனாய் வந்தமர்ந்த இரத்தினமே போனானோ
சிறுவையூர் பெற்றெடுத்த பண்புடையாள்
           நல்லகுரு பிறேமாவை கரம்பிடித்தவன் போனானோ
வாழையடி வாழையென வாரிசுவும்
           பெற்றெடுத்த இரத்தினம்தான் போனானோ.

கரம்பிடித்த பிறேமாவை கலங்க விட்டுவிட்டு
           மூர்த்தி குணம் கஐரட்ணங்களையும் கலங்கவிட்டு
ஆண்மகன்கள் தானென்று விண்ணுலகம் சென்றீரோ
           வாழ்ந்தது போதுமென்று வையகம் சென்றீரோ
வளமிக்க டென்மார்க்கில் நல்வாழ்வு
           போதுமென பரலோகம் சென்றீரோ
அன்பூரில் வந்து பூம்பிட்டி பிடித்து
           பொன்னூரில் வளம் கண்டு வையகம் சென்றீரோ

மைத்துனரும் மைத்துனியும் கலங்கி நிற்க
           தாரமும் தவப்புதல்வர்களும் தனியேதவித்து நிற்க
சகோதரருடன் உற்றாரும் சேர்ந்து கலங்கி நிற்க
           மண்ணைவிட விண்ணே சொர்க்கமென சென்றீரோ
ஐம்பத்தாறில் உயிர்த்த நல் இரத்தினமே மறைந்தீரோ
           அகவை ஐம்பத்தாறில் வையகத்தை மறந்தீரோ
ஏழில் பிறந்து மூன்றைப் பெருக்கி இருபத்தொன்றில் மறைந்தீரோ
           வல்லவன் போட்டகணக்கு சரியென இரத்தினமே மறைந்தீரோ.
 

ஆற்றணாத்துயரத்துடன் வாடும் அன்னாரின் குடும்ப உறவுகள் அனைவருக்கும்
பிறப்பும் இறப்பும் இறைவன் கணக்கு மெய்  அது இன்று அவருக்கு
ஆதலால் அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் நீவிர் ஆறுதல் அடையவும்
எல்லாம்வல்ல மனோன்மணிஅம்மனை வேண்டி நாம் உங்களுக்கு
எமது ஆழ்ந்த இரங்கலை பதிவுசெய்கின்றோம்

 
இரங்கலை பகிரும் சிறுப்பிட்டி ஒன்றியம் - சுவிஸ் சிறுப்பிட்டிநண்பர்கள்
தலைவர்:பொ.கீர்த்திகா. செயலாளர்:அ.கிருஷ்ணா
இணயத்தளம்: லிங்கம். விமலன்
தெடர்புகட்கு: siruppiddyswiss@gmail.com
 
 ம்

                          Copyright © 2012 www.siruppiddy.com, All rights reserved.